செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள


அன்பு நண்பர்களே!!

பன்றிக்காய்ச்சலில் உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்தியாவிலும் இன்றைய தினமே இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம்.

1.பன்றியிலிருந்து பரவுகிறதா? என்றால் இல்லை. இது நோய் தாக்கிய மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.

2. எப்படிப் பரவுகிறது?

சாதாரண சளி பரவுவதுபோல்தான் இதுவும் பரவுகிறது.

1.இருமல்

2.தும்மல்

3.இந்த வைரஸ் இருக்கும் பொருளின் மேல் கையை வைத்துவிட்டு வாய்,மூக்கு ஆகிய பகுதிகளைக் கையால் தொட்டால்.

3.இதன் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல்,சளி,இருமல்,தொண்டைக்கட்டு,மூக்கில் நீர் ஒழுகுதல், உடல்வலி, குளிர்நடுக்கம், களைப்பு.

சிகருக்கு வாந்தி,பேதி வரலாம்.

4.நோயின் வீரியம் ?

நிறையப்பேருக்கு சாதாரண காய்ச்சல், சளிபோல் வந்து செல்லும்.

கீழ்க்கண்டோருக்கு நோய் எளிதில் தொற்றும்

அ. 65 வயதுக்கு மேற்பட்டோர்.

ஆ.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.

இ.கர்ப்பிணிகள்

ஈ.நீரிழிவு நோயாளிகள்

உ.இதய நோயாளிகள்

ஊ.ஆஸ்துமா

எ.சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்.

5.நோய் பரவும் காலம்?

நோய்வருவதற்கு முதல் நாளிலிருந்து, நோய் வந்த 5-7 நாட்கள் வரை. ஆயினும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புக்குறைபாடு உள்ளவர்களுக்கும் 7 நாள் ஆனபின்னும் நோயாளியிடமிருந்து தொற்றலாம்.

6.காத்துக்கொள்வது எப்படி?

அ. மூக்கு வாய் பகுதையை இதற்கான முகமூடியால் மூடிக்கொள்ளவும்( மருந்துக்கடைகளில் கிடைக்கும்-விலை 5 ரூபாய்க்குள்) .

ஆ.அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக்கழுவவும்.

இ.கையால் கண்,மூக்கு, வாயைத் தொடாதீர்கள்.

ஈ.நோயாளியிடமிருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.

உ.உங்கள் ஊரில் இந்நோய் உள்ளதா? நீங்கள் மேற்க்கண்டநோய்எளிதில் தொற்றும் வகையினரா? அப்படியானால் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பாதுகாப்பு முறைகளை மேற்கண்டவாறு கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றைக் கடைப் பிடியுங்கள்.

ஊ.கைகளை சோப்பு&தண்ணீர் கொண்டு சோப்பு 15-20 நொடிகள் கழுவவும்.

7.குழந்தைகளுக்கு இருந்தால் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் இருக்கும்:

அ.மூச்சு வேகமாகவும், மூச்சு விடுவதில் சிரமமும்

ஆ.தோல் ஊதா,சாம்பல் நிறமாகுதல்.

இ.நீர் அருந்தப் பிடிக்காமல் இருத்தல்.

உ.அதிக வாந்தி

ஊ.எழுந்து நடமாடாமல் இருப்பது

எ.குழந்தை எரிச்சலுடனும், தூக்கவிடாமலும் இருப்பது.

ஏ.ஃப்ளூப் போன்ற சளி குறைந்து இருமலும் காய்ச்சலும் வருவது.

8.வயதுவந்தவர்களில் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் காணப்படும்:

அ. மூச்சுவிடச்சிரமம்.

ஆ.நெஞ்சுவலி, நெஞ்சில் அழுத்தமாக உணருதல்

இ.திடீரென்ற கிறுகிறுப்பு, மயக்கம்

ஈ.நிற்காத வாந்தி

உ.சளி நின்று காய்ச்சலும் , இருமலும் அதிகரித்தல்

9.எவ்வளவு நேரம் வரை இக்கிருமி உயிருடன் இருக்கும்?

தும்மல்,இருமலிலிருந்து வெளிப்பட்டு பொருட்களின்மேல் படும் கிருமி 2-8 மணிநேரம் வரை தொற்றும் தன்மையுடன் இருக்கும். அந்த நேரத்தில்.

10.இந்த கிருமி எப்போது அழியும்?

75-100 டிகிரி வெப்பத்தில் இது செயலிழக்கும்.

மேலும் பெரும்பானமையான கைகழுவ, துடைக்க உபயோகிக்கும் கிருமிநாசினிகள் இதனை செயலிழக்கச்செய்யும்.

11. வீட்டில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்?

சாதாரண தரைகழுவும் பொருட்களால் அதில் குறிப்பிட்டபடி கழுவினால் போதும்.

12.குழாயில் வரும் நீரினால் பரவுமா?

குளோரினால் சுத்தப்படுத்தப்பட்ட கார்ப்பரேசன் தண்ணீரினால் பரவாது. இதுவரை நீரால் பரவியதாக தகவல் இல்லை.

13.நீச்சல் குளம், தண்ணீர் விளையாட்டுகள் ஆகியவற்றால் பரவுமா?

சரியாக குளோரினால் சுத்திரிக்கப்பட்ட தண்ணீரினால் பரவாது.

14.முடிவாக சில குறிப்புகள்

1.அடிக்கடி கைகளை சோப்புநீரால் கழுவவும்.

2.நன்கு 8 மணிநேரம் தூங்கவும்.

3.தண்ணீர் நிறைய அருந்தவும்.

4.காய்கறிகள், விட்டமின் சத்து மிக்க உணவை உண்ணவும்.

5.மது அருந்தவேண்டாம்.

6.உடற்பயிற்சி செய்யவும்.

7.கைகளைக் கழுவாமல் முகத்தருகில் கொண்டுசெல்லவேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக