திங்கள், 17 ஜனவரி, 2011

கை மருத்துவம்

பாட்டி ஏங் குழந்தைக்கு அடிக்கடி நீரா வெளிய போகுது

அப்பிடியா, ரெண்டு சொட்டு தேனை எடுத்துக் குழந்தையோட

நாக்குல தடவிவிடு. நின்று போகும்.

பாட்டி...... பாட்டி ஏங் குழந்தை சாப்பிடவே மாட்டீங்குது. அடிக்கடி

அழுதுக்கிட்டே இருக்குது. என்னா செய்றது பாட்டி?

வயித்தில அஜீரணக் கோளாறு இருக்கும். வெத்தலையக் கிள்ளி

வாயில போட்டு மெல்லச் சொல்லு, சரியாப் போயிடும்.

பாட்டி. ஏம் மகனுக்குச் சளிப் பிடிச்சுக்கிட்டு மூக்குல தண்ணியா

ஒழுகுது.

அப்படியா, நொச்சி இலைகளைப் புடுங்கி சட்டியில் போட்டு நல்லா

வேக வச்சு நீராவி பிடிக்கச் சொல்லு. சளி ஓடிப் போயிடும்.

மேற்கூறிய உரையாடல்களை உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர்

வீட்டிலோ நீங்கள் கேட்டிருக்கலாம். இதுதான் கை மருந்து. கை

வைத்தியம், பச்சிலை வைத்தியம் என்ற பெயர்களில் நாட்டுப்புற

மக்களால் வழங்கப்படுகிறது. இம்மருத்துவ முறைகள் முன்னோரிடமிருந்து

மரபு வழியாகப் பயிலப்பட்டு மேற்கொள்ளப் படுபவையாகும். வீட்டிற்கு

அருகில் எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு

உடனடியாக இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு உரிய நோய்களுக்குக்

கொடுக்கப் படுகின்றன. கை மருத்துவத்தால் குணமாகாத நோய்களுக்கே

மருத்துவரையோ, பிற மருத்துவ முறைகளையோ நாடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக