ஞாயிறு, 13 ஜூன், 2010

மைக்ரோன் தலைவலி

உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் மைக்ரோன் தலைவலி வந்தால் இருட்டறைக்குள் சென்று அமைதியாக அமர்ந்து கொள்ள வேண்டும் அல்லது வெளிச்சத்தைப் பார்க்காமல் கண்களை மூடி மறைத்துக் கொள்ள வேண்டும் எனத் தோண்றுகின்றதா? தலைவலியுடன் வயிற்றைப் பிசைவது போன்ற உணர்வு தோன்றி குமட்டலையோ, வாந்தியையோ ஏற்படுத்திவிடுகிறதா? தலைவலி ஒரு பக்கமாகவும், குத்துவது போலவும் இருக்கிறதா? இதுதான் மைக்ரோன் தலைவலி.

உலகல் எழுபது சதவீத பெண்கள் மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். ஒருபக்கமாக ஆரம்பிக்கும் இத்தலைவலி ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும். 25 முதல் 35 வயதுள்ளவர்களை அதிகம் பாதிக்கும். மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 85வீதப் பேருக்கு தலைவலி. 10 வீதபேருக்கு கண் பாதிப்பு. 4 வீதப் பேருக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிறது.

காரணம்.
மூளை இயக்கத்திற்கு தேவையான செட்டடோனின் ஹோர்மோன் போதுமான அளவு மூளைக்குக் கிடைக்காதது. பெருமூளை ரத்த நாளங்கள் சுருக்கி ரத்த ஓட்டம் தடைப்படுதல், ரத்த மண்டல அழற்சி ஆகியவை முக்கிய காரணங்கள்.

தலைவலயின் தன்மை.
தலைவலி விட்டுவிட்டு ஒரே பக்கத்தில் வரும். வலி கடுமையாக இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய வேலைகளை பாதிக்கும். தலையின் இரண்டு பக்கங்களில் அல்லது ஒரே பக்கத்தில் தோன்றி இன்னொரு பக்கத்திற்குப் பரவும். விண்விண் என அதிர்வோடு, பிசைவது போன்று, கண்ணையும் நெற்றியையும் அமுக்குவது போன்ற உணர்வுகளும், தலையில் ஏதோ ஒன்று கிளறுவது போனற உணர்வும் இருக்கும். வெளிச்சத்தை உற்றுப் பார்க்க முடியாது. சத்தம் கேட்டால் மிரட்சி உண்டாகும். திடுக்கிட வேண்டியிருக்கும். வாசனைகளை முகர்ந்தால் உடனடியாக அதிக உணர்ச்சி வசப்படும் நிலை. அதிகப்பசி, பசியின்மை, பார்வை மங்குதல், மூக்கடைப்பு, அடிவயிற்றில் வலி, சிறுநீர் அதிகரித்தல், மற்றும் முகச் சோகையால் தோலின் நிறம் மங்குதல் ஆகியவை காணப்படும்.

மைக்ரேன் நோயாளிகளை தட்ப வெப்ப மாற்றங்கள் மிக அதிகமாக பாதிக்கின்றன. வானிலை அழுத்தம் ஆறு மில்லிமீட்டரிலிருந்து கூடுதலாக இரண்டு மில்லிமீட்டரோ அல்லது அதற்கு மேலோ உயர்ந்தால் போதும், உடனே தலைப்பாரம், உள்ளம் சார்ந்த மாற்றங்கள், ஒவ்வாமைத் தன்மைகள், தலைவலி போன்றவை ஏற்பட்டுவிடும். தலைவலியை நினைத்தாலே அருவருக்கத்தக்க உணர்வுகள், எரிச்சல், அமைதியின்மை, படபடப்பு, களைப்பு, தன்னிலையிழந்தல், ஆகியவை உண்டாகும்.

மைக்ரேன் தூண்டல் காரணிகள்.
அதிக சூரியவெம்பம், வானிலை அழுத்த மாற்றங்கள், காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல், அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல், வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல், ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல் மதுவகைகள் சில கீரைகள், பாலடைக்கட்டி, தயிர்,வினிகர், சொக்லேட், ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல், ஈஸ்ட்ரோ ஜென் ஹேர்மோன், மிக அதிகமான உறக்கம், உறக்கமின்மை, மிகைபசி, இறைச்சி, தலைவலி அடிபடுதல், உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள், அதிக மருந்து சாப்பிடுதல், மாதவிலக்கு, கர்ப்பம். மோசோசோடியம் குளுட்டாமேட், கவலை, மனஇறுக்கம், அசதி, வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன. மைக்ரேனில் பலவகைகள் உள்ளன.

சிகிச்சை முறை
இதை இரு வழிகளில் குணப்படுத்தலாம். மருந்தில்லா முறை, மருந்து முறை, மருந்தில்லா முறையில் ஒற்றைத் தலைவலி வருவதற்க காரணம். அதை தீவிரமாக்கும் காரணம் உட்பட அனைத்தையும் பகுத்தறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உணவு முறையில் மாறுதல், கோப்பி, மது தவிர்த்தல், ஆழ்ந்து உறங்குதல், தவறாமல் மலங்கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். யோகா பயிலலாம். பயோபீட்பேக் முறையை நோயாளிக்குக் கற்பிக்கலாம்.

தடுப்பு முறை தேவைப்படுவோர்.
ஒரு மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேளைகளில் தலைவலி வந்து மூன்று அல்லது அதற்கு அதிகமான நாட்களுக்கு மேல் நீடித்திருந்தால் தடுப்பு முறை சிகிச்சை தேவைப்படும். நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிக்சையளித்தும் குணமாகாமல் சில வேகைளில் வலி போன்றவை ஏற்படும் பட்சத்தில் தடுப்பு முறை சிகிச்சையளிக்கலாம். ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்படும் பக்க விளைவுகளை கவனத்தில் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் அனைவருக்குமே தடுப்புமுறை சிகிச்சை அளிக்க இயலாது.

மருந்து முறையில் குணப்படுத்தல்
ஒற்றை தலைவலியிலிருந்து உடனே விடுபட மருந்து மாத்திரைகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையே சிறந்தது. நோயின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

நன்றி - வீரகேசரி (17 -10 -2003)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக