புதன், 29 டிசம்பர், 2010

சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் மாதுளைச் சாறு!

மாதுளம்பழச் சாறுக்கு சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் சக்தி உள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாதுளம் பழம் உடல் நலனுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் மாதுளைச் சாறு சிறுநீரகக் கோளாறுகளை எதிர்த்துப் போராடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சீறு நீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மாதுளைச் சாறு கொடுத்தனர். இதில் அவர்களின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டைக் கண்டறிந்தனர். மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ஸ் தான் இதற்கு காரணம்.

டயாலிசிஸ் செய்யும் முன் சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு மாதுளம்பழச் சாறு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்த நூற்றாண்டில் சிறு நீரகக் கோளாறு அதிக அளவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியைமறுபடியும் மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர் டாக்டர் பாட்யா கிரிஸ்டல் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாதுளை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், கருத்தரிப்புத் திறனை அதிகரிக்கும், வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது

நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

vinoth

தூ‌க்க‌ம் எ‌ன்பது இரவானது‌ம் நமது உட‌ல் இளை‌ப்பாற‌க் ‌கிடை‌‌த்த ‌விஷய‌ம் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் எ‌‌ண்‌ணி‌‌க் கொ‌ண்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், தூ‌க்க‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன.

தூ‌க்க‌ம் எ‌ன்பது ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் அமையு‌ம். ஒரு ‌சில‌ர் படு‌த்தது‌ம் தூ‌ங்‌கி ‌விடுவ‌ர். ‌சில‌ர் ம‌ணி 12ஐ தா‌ண்டினா‌ல் தா‌ன் தூ‌ங்கவே செ‌ல்வ‌ர். ‌சில‌ர் புர‌ண்டு புர‌ண்டு படு‌த்து தூ‌க்க‌த்துட‌ன் போராடி கடை‌சியாக தூ‌ங்குவ‌ர். தூ‌ங்குவ‌திலு‌ம் பல வகைக‌ள் உ‌ண்டு. ஆ‌ழ்‌ந்த உற‌க்க‌ம், லேசான உ‌ற‌க்க‌ம் போல பல உ‌ண்டு.

பொதுவாக கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌மே ‌சிற‌ந்த தூ‌க்கமாகு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாம‌ல் தூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல்தா‌ன் உ‌ண்மை‌யி‌ல் ஆ‌ழ்‌ந்த தூ‌க்க‌த்தை தூ‌ங்‌கி‌னீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ப்படு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌த்தை‌க் கான சுவாச‌ம் ‌சீராக இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌சீரான சுவாச‌ம் இரு‌ப்‌பி‌ன் ந‌ல்ல தூ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். சுவாச‌த்‌தி‌ல் ‌சிதைவு ஏ‌ற்ப‌ட்டா‌ல் தூ‌க்க‌‌த்‌திலேயே மன‌ம் அ‌திக‌ம் வேலை செ‌ய்ய ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம். மன‌ம் வேலை செ‌ய்வதுதா‌ன் கனவுக‌ளி‌ன் அடி‌ப்படையே.

ச‌ரி தூ‌க்க‌த்‌தி‌ல் சுவாச‌த் தடை ஏ‌ற்பட‌ எ‌ன்‌ன‌க் காரண‌ம் இரு‌க்கு‌ம். நமது உணவு முறைதா‌ன். தூக்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம் பல உணவுக‌ள் உ‌ள்ளன. தூ‌க்க‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் உணவுகளு‌ம் உ‌ள்ளன. அவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்து அளவோடு உ‌ண்பதுதா‌ன் தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌சீரான சுவாச‌த்தை அ‌ளி‌க்கு‌ம்.

இர‌வி‌ல் சா‌ப்‌பிடு‌‌ம் உணவானது அளவு குறைவான உணவாகவு‌ம், கார‌மி‌ல்லாத, வாயு சே‌ர்‌க்காத உணவாகவு‌ம் இரு‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

உட‌ல் சு‌த்தமு‌ம், ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமு‌ம் கூட தூ‌க்க‌த்‌தி‌ற்கு அடி‌ப்படையாகு‌ம். உற‌‌ங்க‌ப் போகு‌ம் மு‌ன் முக‌ம், கை கா‌ல்களை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது‌ம், நா‌ம் படு‌க்கு‌ம் இட‌ம் சு‌த்தமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம் இரு‌க்கு‌ம்படியு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

சா‌ப்‌பி‌ட்டவுட‌ன் களை‌ப்போடு செ‌ன்று படு‌க்கை‌யி‌ல் ‌விழுவது, சோ‌ம்பலையு‌ம், கெ‌ட்ட கனவுகளையு‌ம் அ‌ளி‌க்கு‌ம். பக‌ல் தூ‌க்க‌ம் ‌நி‌ச்சயமாக இரவு‌த் தூ‌க்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம். சா‌ப்‌பி‌ட்டு இர‌ண்டு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு படு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் ‌நி‌ச்சயமாக ந‌ல்ல தூ‌க்க‌ம் வரு‌ம்.

தூ‌க்க‌ம் உடலு‌க்கு மட‌்டும‌ல்ல, மன‌த்‌தி‌ற்கு‌ம் ஓ‌ய்வ‌ளி‌க்‌கிறது. அதே போல தூ‌ங்காத ம‌னித‌ர்க‌ளி‌ன் மனமு‌ம் சோ‌ர்வடைவதை காணலா‌ம். ச‌ரியான தூ‌க்க‌ம் இ‌ல்லையே எ‌ன்ற எ‌ண்ணமே, மன‌தி‌ற்கு‌ள் கோபமாகவு‌ம், துக்கமாகவு‌ம் மாற‌க் கூடு‌ம். இதனா‌ல் தேவைய‌ற்ற ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படலா‌ம்.

ந‌ல்ல ‌சீரான தூ‌க்க‌ம் மனதை ஆன‌ந்தமான ‌நில‌ை‌யி‌ல் வை‌த்‌திரு‌க்க உதவு‌ம். மனமே நமது அ‌ன்றாட கா‌ரிய‌ங்களு‌க்கு உறுதுணையாக இரு‌க்கு‌ம். மன‌ம் ஆன‌ந்தமாக இரு‌ந்தா‌ல் நமது வேலையு‌ம் ‌திரு‌ப்‌தியாக இரு‌க்கு‌ம்.

தூ‌க்க‌ம் வராத ‌நிலை‌யி‌ல் ‌புர‌ண்டு புர‌ண்டு படு‌ப்பதை ‌விட, உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த ஏதேனு‌ம் ஒ‌ன்றை செ‌ய்து பாரு‌ங்க‌ள். ‌‌மன‌ம் உ‌ற்சாக‌ம் அடைவதா‌ல் வராத தூ‌க்கமு‌ம் ‌விரை‌வி‌ல் வ‌ந்து சேரு‌ம். ‌பிடி‌த்த வேலை எ‌ன்றா‌ல் பா‌ட்டு கே‌ட்பது, பு‌த்தக‌ம் படி‌ப்பது போ‌ன்றவை. தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌ப்பதா‌ல் பலரது தூ‌க்க‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.

தூ‌க்க‌ம் கெ‌ட்டு எ‌ந்த‌ப் ப‌ணியை செ‌ய்தாலு‌ம் அது வெ‌ற்‌றிகரமாக முடியாது. எனவே, தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌விஷய‌ங்களை நா‌ம் ச‌ரியான முறை‌யி‌ல் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம்

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும்

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும். இதனால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். சிலர் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள். முதலில் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.பொதுவாக குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் போதோ, கோபத்தில் இருக்கும் போதோ அவர்களுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களாகிய நாமே கோபத்தில் உள்ளபோது உண்ண மாட்டோம். குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. குழந்தை சாப்பிடவில்லையென்றால் உடனே குழந்தையை சில தாய்மார்கள் மிரட்டுவார்கள். சிலர் பயம் காட்டுவார்கள், சிலர் அடித்து சாப்பாடு ஊட்டுவார்கள்.


குழந்தைகளை மிரட்டும்போது அவர்கள் மன நெருக்கடியும், டென்சனையும் அனுபவிக்க நேரிடும். இதனால் குழந்தைகள் உணவை அறவே வெறுப்பார்கள். அந்த நேரத்தில் எந்த உணவை வாயில் வைத்தாலும் துப்பி விடுவார்கள். அதுபோல் குழந்தை களுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது.


தாயின் அவசரத்திற்கு தகுந்தபடி குழந்தையால் மின்னல் வேகத்தில் சாப்பிட முடியாது. சிறிதளவு உணவு கொடுத்தாலும், பொறுமை யாகவும், நிதானமாகவும் ஊட்ட வேண்டும். முன்பெல்லாம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பாட்டி கதைகள் கூறுவார்கள். (அதற்காக பொய் சொல்லக்கூடாது) குழந்தைகளும், ஓடி, ஆடி விளையாடி உணவருந்தும். ஆனால் இன்று பாட்டியும் இல்லை, கதை சொல்ல யாரும் இல்லை.


தொலைக்காட்சியும், சி.டியும், வீடியோ கேம் தான் பாட்டியாக உள்ளது. பொருள் தேடுவது அவசியம்தான். ஆனால் குழந்தை வளர்ப்பு அதைவிட அவசியம். குழந்தைகளை இயந்திரமாக நினைக்காமல் அவர்களை ஜீவன்களாக நினைத்து உணவு முதல் எல்லாவற்றிலும் அக்கறை எடுத்துக்கொண்டால் தான் எதிர்கால குழந்தை ஆரோக்கிய மானதாகவும், அற்புத குணம் கொண்டதாகவும் வளரும்.


ஒரு வயது ஆரம்பம் முதல் ஒருநாளைக்கு 4 முதல் 5 முறை வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 1 வயது முதல் குழந்தைகளுக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் அதன் சுவையை அறியாமல் குழந்தை சாப்பிடாமல் துப்பும் அல்லது வாந்தி எடுக்கும். இதனால் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்று எண்ணி பழக்கப்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது.

பொறுமையோடு மீண்டும் மீண்டும் கொடுத்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அதன் சுவை குழந்தைக்கு பிடித்து விருப்பத்தோடு சாப்பிட ஆரம்பிக்கும். உணவை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். இந்த திடமான உணவுகள் குழந்தைக்கு செரிமானம் ஆக 3 மணி நேரமாவது ஆகும். எனவே அடிக்கடி உணவைத் திணிக்கக் கூடாது. ஆவியில் வேகவைத்த மாவு உணவுகள், அதாவது இட்லி, இடியாப்பம், வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நன்கு வேகவைத்த முட்டை, ஆவியில் வேகவைத்த நேந்திரம் பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.


மிளகு கலந்து குழைய வேகவைக்கப்பட்ட வெண்பொங்கல், குழைத்த சாதத்துடன், மோர், இரசம், பருப்பு, கடைந்த கீரை இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து கொடுக்க வேண்டும். வேகவைத்து மசித்த காய்கறிகள், வேகவைத்த காரட், வேகவைத்த ஆப்பிள் போன்றவற்றை கொடுக்கலாம். இரவில் காய்ச்சிய பால் கொடுக்க வேண்டும். ஒன்றரை வயதுக்கு மேல் நன்கு வேகவைத்த ஆட்டிறைச்சி, ஈரல், மீன் போன்ற மாமிச உணவுகளை சிறிதளவு கொடுக்கலாம்.


சப்பாத்தி, ரொட்டி, பிரட் போன்றவற்றை குறைந்த அளவு கொடுக்கலாம். குழந்தைக்கு பல் முளைத்து மென்று சாப்பிடும் அளவு வந்தவுடன் வேகவைத்த பருப்புகள், தானிய வகைகளைக் கொடுக்க வேண்டும். காரட், காலிபிளவர், பசலை கீரை, வேகவைத்த முட்டை தொடர்ந்து கொடுக்க வேண்டும். பழத்துண்டுகள் தோல் நீக்கி கொடுக்க வேண்டும். பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றையும் கொடுக்கலாம். சாப்பிட மறுக்கிறார்கள் என்பதற்காக செயற்கையாக சுவைகூட்டிய துரித உணவுகளை தொடர்ந்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுத்த பெற்றோர்களாக நாம் ஆகிவிடுவோம் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

நன்றி : "வெளிச்சம்"

திங்கள், 6 டிசம்பர், 2010

வெண்டைக் காயின் மருத்துவக் குணங்கள்
காய்கள், கனிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே. இதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. மனிதர்களின் அன்றாட உணவுத் தேவைகளில் காய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொழுப்புச் சத்து குறைந்த வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள்

நிறைந்தவைதான் காய்கறிகள்.

இவைகளை சமைத்து உண்பதால் உடலுக்கு வலு கிடைக்கும். இவை எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலைப் போக்கி நீண்ட ஆயுளைக் கொடுக்கும். இந்த இதழில் அனைவருக்கும் பரிச்சயமான வெண்டைக் காயின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். வெண்டையை ஏழைகளின் நண்பன் என்று கூட சொல்லலாம். சைவ உணவு உண்பவர்கள் அதிகம் சேர்க்கும் காயாகும்.

எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்க்கலாம். இது இந்தியாவின் வெப்பமான பாகங்களில் பயிராகும். சிறு செடியாக காணப்படும். இதன் காய் சமையலுக்கு பயன்படுகிறது. இலை, விதை, மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.

இதன் காயால், நாள்பட்ட கழிச்சல், பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் போகும். நல்ல சுவையைக் கொடுக்கும்.

ஞாபக சக்தி

மனிதனுக்கு நினைவாற்றல் அவசியத் தேவையாகும். ஞாபக சக்தியை இழப்பது மனிதனுக்கு நோய் போன்றது. ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இது மூளை நரம்புகளைக் தூண்டி அங்கு சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியை நன்கு சுரக்கச் செய்யும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெண்டைக் காயை எண்ணெயில் வதக்கி கொடுப்பது நல்லது. அவர்களின் வளர்ச்சியில் வெண்டைக் காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்தம் சுத்தமடைய

இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக செயல்படச் செய்கிறது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைக்கிறது. இரத்த அழுத்தத்தைப் போக்கி இதய அடைப்புகளைத் தடுக்கிறது. சிறுநீரக கோளாறுகளைப் போக்குகிறது. வயிற்றுக் கடுப்புடன் இரத்தம் வெளியேறுவதை தடுக்குகிறது.

மலச்சிக்கலைப் போக்கும்

மலச்சிக்கல் தான் நோய்க்கு மூலகாரணம். மலச்சிக்கலைப் போக்க வெண்டைக்காய் சிறந்த மருந்தாகும். இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை உடலின் செரிமான சக்தியைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும்.

வயிற்றுப்புண் ஆற

வயிற்றில் உண்டான புண்கள் ஆற வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வயிற்றுப் புண் எளிதில் குணமாகும். அசீரணக் கோளாறு நீங்கி நன்கு பசியைத் தூண்டும்.

சரும பாதிப்பு நீங்க

புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படும் சருமத்திற்கு வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதால் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுத்து பாதிப்புகளை நீக்குகிறது.

குழந்தை நன்கு வளர

தினமும் பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது குழந்தைகளை அறிவு ஜீவியாக எதிர்காலத்தில் மாற்றும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதிக சர்க்கரை உடம்பில் கூடிவிட்டால் வெண்டைக் காயை மூன்று துண்டாக நறுக்கி அதை குறுக்காக நறுக்கி இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் அப்படியே குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். தேவைப்படும்போது இதை பயன்படுத்தலாம்.

உடல் வலுப்பெற

உடல் சோர்வு, மனச்சோர்வு இருந்தால் மனிதன் நிரந்தர நோயாளிதான். இதைப் போக்க வெண்டைக்காயை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நன்கு முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து அருந்தி வந்தால் உடல் வலு கிடைக்கும். மயக்கம் தலைசுற்றல் நீங்கும். சமைத்து உண்பதற்கு பிஞ்சு வெண்டைக்காய் சிறந்தது.

100 கிராம் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் சக்தி – 31 கலோரி கார்போஹைட்ரேட் – 7.03 கிராம் சர்க்கரை – 1.20 கிராம் – 3.2 கிராம் கொழுப்பு – 0.10 கிராம் புரதம் – 2.00 கிராம் நீர்ச்சத்து – 90.17 கிராம்

வெள்ளி, 26 நவம்பர், 2010

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.

இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.

இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:

பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.

இதற்கு "ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.

மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்

மண்ணீரலின் பணிகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனிதன் நோயின்றி வாழமுடியும். இந்த உறுப்புகளில் மனித இயக்கத்திற்கு பிரதானமான சில உறுப்புகள் உள்ளன. அவற்றில் மண்ணீரலும் ஒன்று.

மண்ணீரலானது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது ரெட்டிக்குலர் செல்கள் (Reticular cells) மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. மண்ணீரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது.

மூளையின் செயல் பாடுகளையும், நரம்புகளின் தூண்டுதலையும் சீராக்குகிறது. எண்ணங்களையும் செயல்களையும், உருவாக்குவதும், ஊக்குவிப்பதும் மண்ணீரல்தான். முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிக்கும் செயலே மண்ணீரலுக்கு முக்கிய வேலையாகும். இரத்த சிவப்பணுக்களின் செயல்பாடுகளை சீர்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் மண்ணீரலின் முக்கிய பணியாகும்.

மண்ணீரல் பாதித்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும். சில சமயங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொடுத்து மாரடைப்பைக்கூட (Heart attack) ஏற்படுத்துகிறது. நுரையீரலின் செயல் பாடுகளிலும் மண்ணீரலுக்கு பங்குண்டு. இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது. அதுபோல் இரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப் பொருட்களை வடிகட்டி வெளியேற்றும் உறுப்பாகவும் மண்ணீரல் செயல்படுகிறது.

இரத்தம் வழியாக வரும் நோய்க்கு எதிரான தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதே மண்ணீரலின் முக்கிய பணியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது. மன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

மண்ணீரல் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்

உடம்பின் எடை அதிகரித்தல்,

அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல்,

நாக்கு வறண்டு விறைப்புத் தன்மையடைதல்,

வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல்,

வாந்தி, உடல் பலவீனமடைதல்,

உடல் பாரமாக தெரிதல்,

கால் பகுதிகளில் வீக்கம், வலி,

சாப்பிட்டவுடன் தூக்கம்,

எப்போதும் சோர்வு,

இடுப்பு பக்கவாட்டு மடிப்புகளுடன் சதை உண்டாதல்,

மஞ்சள் காமாலை ஏற்படுதல்,

இரத்த அழுத்தம் அதிகரித்தல்,

சிறுநீர் சரியாக பிரியாதிருத்தல்.

மண்ணீரல் பாதிப்பு ஏற்படக் காரணம்

· மன அழுத்தம்,

கோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோர்க்கு மண்ணீரல் பாதிப்படையும்.

· மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்ற வற்றாலும் இந்நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

· கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்படையும்.

· இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு காரணமாக மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.

· இதயத்திற்கு இரத்தம் செல்வதுபோல் மண்ணீரலும் இரத்தத்தை உள்வாங்குகிறது.

· கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவைகளால் மண்ணீரல் பாதிக்கப்படலாம்.

மண்ணீரலைப் பலப்படுத்தும் உணவுகள்

கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்காயம். கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ். இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.