புதன், 26 ஜனவரி, 2011

மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான் பழம்


ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான்(தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.

இந்த பழமானது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இதன் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு.

இதன் மருத்துவ குணங்கள் சில:

* இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன்படுத்தி வந்தனர்.

* சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

* சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

* வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

* மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

* பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து மங்குஸ்தான் ரீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

* சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும். மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1
கிராம் புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி

மங்குஸ்தீன் ரீ: இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த மங்குஸ்தீன் ரீ. இந்த ரீ குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தடுக்கப்படும்.

திங்கள், 17 ஜனவரி, 2011

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க :

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு

இரத்த சோகைஎன்றதும், பல வகையான மாத்திரைகளை முழுங்கி வருவார்கள். ஆனால் அதற்கு இயற்கையின் வரப்பிரசாதமான தேன் தான் நிரந்தர தீர்வை அளிக்கும் மருந்தாகும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு

கை மருத்துவம்

பாட்டி ஏங் குழந்தைக்கு அடிக்கடி நீரா வெளிய போகுது

அப்பிடியா, ரெண்டு சொட்டு தேனை எடுத்துக் குழந்தையோட

நாக்குல தடவிவிடு. நின்று போகும்.

பாட்டி...... பாட்டி ஏங் குழந்தை சாப்பிடவே மாட்டீங்குது. அடிக்கடி

அழுதுக்கிட்டே இருக்குது. என்னா செய்றது பாட்டி?

வயித்தில அஜீரணக் கோளாறு இருக்கும். வெத்தலையக் கிள்ளி

வாயில போட்டு மெல்லச் சொல்லு, சரியாப் போயிடும்.

பாட்டி. ஏம் மகனுக்குச் சளிப் பிடிச்சுக்கிட்டு மூக்குல தண்ணியா

ஒழுகுது.

அப்படியா, நொச்சி இலைகளைப் புடுங்கி சட்டியில் போட்டு நல்லா

வேக வச்சு நீராவி பிடிக்கச் சொல்லு. சளி ஓடிப் போயிடும்.

மேற்கூறிய உரையாடல்களை உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர்

வீட்டிலோ நீங்கள் கேட்டிருக்கலாம். இதுதான் கை மருந்து. கை

வைத்தியம், பச்சிலை வைத்தியம் என்ற பெயர்களில் நாட்டுப்புற

மக்களால் வழங்கப்படுகிறது. இம்மருத்துவ முறைகள் முன்னோரிடமிருந்து

மரபு வழியாகப் பயிலப்பட்டு மேற்கொள்ளப் படுபவையாகும். வீட்டிற்கு

அருகில் எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு

உடனடியாக இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு உரிய நோய்களுக்குக்

கொடுக்கப் படுகின்றன. கை மருத்துவத்தால் குணமாகாத நோய்களுக்கே

மருத்துவரையோ, பிற மருத்துவ முறைகளையோ நாடுவர்.