திங்கள், 17 ஜனவரி, 2011

சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்த மருத்துவம் என்பது தமிழ் மக்களுக்காகத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம். வாழ்க்கை நெறிமுறைகளை அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்கான உரிய நெறிமுறைகளைத் தொகுத்தவர்கள் சித்தர்கள். எந்தவிதமான வசதியும் இல்லாத காலத்திலும் இந்த நோய்க்கு இந்த மருந்து எனவும் அது எவ்வளவு காலத்தில் தீரும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை அறிவியலும் உணர்ந்து ஏற்றுக் கொள்ள பல நூறு ஆண்டுகள் ஆயின. எடுத்துக்காட்டாகக் காமாலை நோய்க்குக் கீழாநெல்லியைச் சித்தர்கள் மருந்தாகக் கொடுத்தனர்.ஆனால் இப்போது தான் வெளிநாடுகளில் கீழாநெல்லியை மருந்தாக அறிவித்துள்ளனர்.

சித்தர்கள் கூறிய வழியில் மூலிகைகளை மட்டுமல்லாது பாடானங்கள், சீவ பொருட்கள் இவை அனைத்துமே நாங்கள் மருந்தாகப் பயன்படுத்துகிறோம்.அண்மையில் இலண்டன் பல்கலைகழகத்தில் பாடானம் என்று சொல்லக்கூடிய ஆர்சனிக்கை ஆய்வு செய்து, அது புற்று நோய்க்கு மிகச் சிறந்த மருந்து என அறிவித்துள்ளனர். ஆனால் ஆங்கில மருத்துவம் பாடானம் என்றால் நச்சுத் தன்மை வாய்ந்தது அதைப் பயன்படுத்தக்கூடாது என வலியுத்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக