செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

குழந்தைகள் கைத்தொலைபேசி பாவிப்பது நல்லதல்ல


இன்றைய அவசர உலகில் தொலைத் தொடர்பாடல் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர்வரை கைத்தொலைபேசியினை இப்பொழுது பயன்படுத்திவருகிறார்கள். இப்படியான தொலைபேசிப் பாவனையால் மூளை பாதிக்கப்படுவதாக பலர் குறிப்பிடுகின்றபோதிலும் இன்னமும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் டோனி செவேல் என்ற மருத்துவர், குழந்தைகள் கைத்தொலைபேசி பாவிப்பது அவ்வளவு நல்லதல்ல என்று வலியுறுத்தியுள்ளார். ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும் வரமுன் காப்பது நல்லது என மேலும் குறிப்பிட்டுள்ளார். கைத்தொலைபேசி பாவனையின்போது வெளிப்படுகின்ற ஒலி, ஒளி என்பன சிறுவர்களின் மூளைக்கு நேரடியாக கடத்தப்படுவதால் அவர்களின் மூளை செயலிழக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிடுகிறார். இந்த கதிர்களை தாங்கும் சக்தி சிறுவர்களுக்கு கிடையாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

யார் என்ன சொன்னாலென்ன, நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பவர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே இருக்கப்போவதில்லை. இக்கருத்தில் எவ்வளவுதூரம் உண்மையிருக்கிறது என்பதை ஆராயாமல், வரமுன் காப்பது சிறந்தது என்பதற்கிணங்க செயற்பட்டால் எதையுமே நாங்கள் வெல்லலாம். ஆகையினால் குழந்தைகளிடம் கைத்தொலைபேசியினை பாவிக்கக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லதல்லவா?