செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

அன்புக்குரியவரை அணைத்தால் உடல்வலி, மனஅழுத்தம் குறையும்


உடல்வலி, மனஅழுத்தம் ஏற்படும் நேரத்தில் அன்புக்கு உரியவரை கட்டி அணைத்தால் வலி, கவலை பறக்கும் என்று அமெரிக்க ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். "ஆ" என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களின் படத்தை அந்தந்த பெண்ணிடம் கொடுத்தனர்.

தனது அன்புக்குரியவரை பார்த்த விநாடியில் பெண்களின் இதழில் புன்னகை தோன்றியது. அவர்களது காயத்தின் வலி தணிந்தது. படத்தை பார்த்ததற்கே இப்படியா என, அவரவர் துணையை நேரில் வரவழைத்தனர். லேசாக அணைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கடுமையான உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அன்புக்குரியவரின் அணைப்பு விரட்டி விடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதுகுறித்து மனநல கல்வியாளர் டாக்டர் லுட்விக் லோன்ஸ் கூறுகையில், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்க, தம்பதியர் குறைந்தபட்சம் தினமும் நான்கு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும்.

மாதத்திற்கு 2 முறையாவது கைகோர்த்து வாக்கிங் செல்ல வேண்டும். ஒரு முறையாவது சினிமா, டிராமா என்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்படி செய்து வந்தால் டாக்டர்களை தேடிச் செல்லாமல், மக்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்குமாம்.

thanks net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக