திங்கள், 17 ஜனவரி, 2011

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க :

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு

இரத்த சோகைஎன்றதும், பல வகையான மாத்திரைகளை முழுங்கி வருவார்கள். ஆனால் அதற்கு இயற்கையின் வரப்பிரசாதமான தேன் தான் நிரந்தர தீர்வை அளிக்கும் மருந்தாகும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு

கை மருத்துவம்

பாட்டி ஏங் குழந்தைக்கு அடிக்கடி நீரா வெளிய போகுது

அப்பிடியா, ரெண்டு சொட்டு தேனை எடுத்துக் குழந்தையோட

நாக்குல தடவிவிடு. நின்று போகும்.

பாட்டி...... பாட்டி ஏங் குழந்தை சாப்பிடவே மாட்டீங்குது. அடிக்கடி

அழுதுக்கிட்டே இருக்குது. என்னா செய்றது பாட்டி?

வயித்தில அஜீரணக் கோளாறு இருக்கும். வெத்தலையக் கிள்ளி

வாயில போட்டு மெல்லச் சொல்லு, சரியாப் போயிடும்.

பாட்டி. ஏம் மகனுக்குச் சளிப் பிடிச்சுக்கிட்டு மூக்குல தண்ணியா

ஒழுகுது.

அப்படியா, நொச்சி இலைகளைப் புடுங்கி சட்டியில் போட்டு நல்லா

வேக வச்சு நீராவி பிடிக்கச் சொல்லு. சளி ஓடிப் போயிடும்.

மேற்கூறிய உரையாடல்களை உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர்

வீட்டிலோ நீங்கள் கேட்டிருக்கலாம். இதுதான் கை மருந்து. கை

வைத்தியம், பச்சிலை வைத்தியம் என்ற பெயர்களில் நாட்டுப்புற

மக்களால் வழங்கப்படுகிறது. இம்மருத்துவ முறைகள் முன்னோரிடமிருந்து

மரபு வழியாகப் பயிலப்பட்டு மேற்கொள்ளப் படுபவையாகும். வீட்டிற்கு

அருகில் எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு

உடனடியாக இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு உரிய நோய்களுக்குக்

கொடுக்கப் படுகின்றன. கை மருத்துவத்தால் குணமாகாத நோய்களுக்கே

மருத்துவரையோ, பிற மருத்துவ முறைகளையோ நாடுவர்.