செவ்வாய், 21 செப்டம்பர், 2010

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்க்களைப் பார்ப்போம்.

டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.

1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?

டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.

2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

 • திடீர்க் காய்ச்சல்,
 • தலைவலி,
 • தசைவலி,
 • மூட்டுவலி,
 • கண் பகுதியில் வலி
 • தோல் தடித்து சிவத்தல் (RASHES)
 • தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
 • வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
 • வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்

3.தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்?

 • அதிக காய்ச்சல்
 • கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு

4.டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?

 • டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும் நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.

5.டெங்குவை கண்டறிய இரத்தப் பரிசோதனைகள் எவை?

 • இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
 • பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை

6.டெங்கு வருவதைத் தடுப்பது எப்படி?

 • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
 • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
 • கொசு மருந்தடித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக