செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!

பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!

அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.

நோய்க்குறிகள்

சாதாரண சளிபன்றிக்காய்ச்சல்
.
காய்ச்சல்காய்ச்சல் பெரும்பாலும் குறைவு.80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும்.
.
இருமல்இருமலும் நல்ல சளியும் இருக்கும்.சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும்.
.
உடல் வலிஉடல் வலி மிதமாக இருக்கும்.கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும்.
.
மூக்கடைப்புமூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
.
பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.
குளிர் நடுக்கம்குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது.
.
60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
உடல் சோர்வுஉடல் சோர்வு குறைவாக இருக்கும்.
.
உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
தும்மல்தும்மல் சாதாரணமாகக் காணப்படும்.
.
தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
நோய்க்குறிகள் தோன்றும் காலம்.சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும்.இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும்.
.
தலைவலிசாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது.பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும்.
.
நெஞ்சில் பாரம்,வலிசாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது.பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.

பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக