திங்கள், 23 மே, 2011

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை


சிறிய நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை எதிர்ப்பதற்கு ஒரு கரண்டி சர்க்கரை வெகுவாக உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நோய் தொற்றை எதிர்க்கும் ஆண்டிபயாடிக் திறனை மேம்படுத்துவதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு சில நுண் உயிரி தொற்றுகள் பாதிப்பு காரணமாக நோய்கள் நீண்ட காலம் இருப்பதுடன் அடிக்கடி நோய்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

மருந்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை நுண் உயிரிகள் வீரியம் இழக்கச் செய்து விடுவதால் நோய் தொற்றுப் பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது.

நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் பாதிப்பை தவிர்க்க தாவர சர்க்கரை வகைகளான குளுக்கோஸ், ப்ரக்டோஸ் உதவுகிறது. ஒரு கரண்டி சர்க்கரை மருந்தின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து நுண் உயிரிக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்று அபாயமும் தவிர்க்கப்படுகிறது. பாஸ்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள் சர்க்கரையை பயன்படுத்தி நுண் உயிரி சோதனையை செய்த போது இந்த உண்மை தெரியவந்தது.

சிறுநீரக பாதையில் இ.கோலி என்ற பக்டீரியா நோய் தொற்றை ஏற்படுத்தும். இந்த பாதிப்பை அடிக்கடி ஏற்படுத்தும் நுண் உயிரியை 99.9 சதவீதம் 2 மணி நேரத்தில் சர்க்கரை உதவி மூலம் விஞ்ஞானிகள் அகற்றினர்.

சர்க்கரை இல்லாமல் உள்ள மருந்து உரிய பலன் அளிப்பதில்லை என்கிற இந்த ஆய்வு அறிக்கை நேச்சர் இதழில் வெளியாகி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக