புதன், 16 ஜூன், 2010

மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆறு இலகுவான வழிகள்

உங்களுக்குப் பிடித்தமான பொருளை எப்படி விரும்புவீர்களோ அதைப்போல குடும்பத்தையும் நேசியுங்கள்…
அமெரிக்காவில் பிரபலமான ஃபூ ஃபைட்டர்ஸ் என்ற ராக் இசைக் குழுவின் தலைவர். இவருடைய வாழ்க்கை சுவாரசியமானது. இவர் பிறந்த மூன்றே ஆண்டுகளில் அப்பாவும் அம்மாவும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். அம்மாவிடம் வளர்ந்தார் க்ரோல். சின்ன வயதிலேயே இசை மீது காதல். கிதார் இசைக் கருவியைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இவருக்கு துணையாக இவருடைய சகோதரியும் சேர்ந்து கொண்டார்.
க்ரோலுக்கு 13 வயதாகும் போது, அவரையும் அவருடைய சகோதரியையும் உள்ளூர் ராக் குழு ஒன்றில் சேர்த்துவிட்டார். அப்போது முதல் கித்தார் கருவியை விட்டுவிட்டு, ட்ரம்ஸ் வாசிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இசைக்குழுவில் இவருடைய ட்ரம்ஸ் இசைக்கு முக்கியத்துவம் கிடைத்தது. சின்னக் குழுவில் சேர்ந்து ஊர்சுற்றிய க்ரோல் பெரிய குழுவில் வாசிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், 20 வயது நிறைந்திருந்தால் மட்டுமே அதில் சேர முடியும். 17 வயதே நிரம்பியிருந்த க்ரோல், தனது வயதை 20 என்று பொய் சொல்லி குழுவில் சேர்ந்தார்.
பிறகு உண்மை தெரிந்தாலும், அவருடைய திறமையை பார்த்து வியந்த குழுவினர் தங்களுடனேயே வைத்துக் கொண்டனர். நிர்வாணா என்ற குழுவில் சேர்ந்த அவர், குழுவின் நடுநாயகமாக மாறினார். இவருக்கென்று தனி ஆவர்த்தன நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசிக்க தொடங்கினர். இந்தக் குழுவுக்காக பாடல்களையும் இயற்றத் தொடங்கினார். நிர்வாணா குழுவை உருவாக்கிய கர்ட் கோபைன் என்பவர் 1994 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அத்துடன் க்ரோலும் வேலை இழந்து விட்டார்.
இனி என்ன செய்வது என்ற குழப்பம் சூழ்ந்தது. மனம் போன போக்கில் சுற்றித் திரிந்தார். பல்வேறு குழுக்களுக்குப் பாடல்கள் கேட்டனர். ட்ரம்ஸ் இசைக்க வரும்படி வற்புறுத்தினர். ஆனால், அவர் தனது திட்டத்தைத் தெளிவாக வகுப்பதற்காக காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். பாடல்களை எழுதினார். இசைக் குறிப்புகளை தொகுத்து வைத்தார். மேடைகளில் இவர் பாடினாலோ, கிதார் வாசித்தாலோ, ட்ரம்ஸ் வாசித்தாலோ ஆரவாரிக்கும் கூட்டம் இவரைத் தேடியது. அவர்களுக்குத் தீனிபோடுவதற்காகவே ஃபூ பைட்டர்ஸ் என்ற இசைக் குழுவை தொடங்கினார் டேவ் க்ரோல். அமெரிக்காவில் பரப்பரப்பான இசைக்குழு என்ற பெயரைப் பெற்றுள்ளது இந்தக் குழு. மகிழ்ச்சியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு டேவ் க்ரோல் ஆறே ஆறு எளிய வழிகளை தெரிவித்துள்ளார்.
1. நீங்கள் விரும்புகிற வாழ்க்கைக்கு தகுந்த உடை அணியுங்கள்
நீங்கள் உடை அணியும்போது, அது முன்னேற்றம் சார்ந்ததாகவோ, லட்சியம் சார்ந்ததாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடை அணிவதால் மட்டும் ராக்கெட் வேகத்தில் உங்கள் முன்னேற்றம் அமையப் போவதில்லை. நான் எனது குழுவை தொடங்கும் போது, ஷீக்கள் இல்லாமலும், வெறும் சாதாரண ஷர்ட்டுகளுடனும்தான் தொடங்கினேன்.வேலையைக் காட்டிலும் வாழ்க்கைக் கூடுதல் முக்கியத்துவம் அளியுங்கள். நான் என்ன செய்கிறோமோ அதற்கு ஏற்பவே நமது இதயமும் செயல்படும். வெட்டித்தனமாய் சுற்றித் திரிந்துவிட்டு, திடீரென்று பாடல் எழுதவோ மேடையில் குதித்து பாடவோ முடியாது. அதற்கு இதயமும் ஒத்துழைக்காது.
2. உங்களுக்குப் பிடித்தமான பொருளை எப்படி விரும்புவீர்களோ அதைப்போல குடும்பத்தையும் நேசியுங்கள்
நமக்கு விருப்பமான நபர்களுடன் இணைந்து நமக்கு பிடித்தவற்றில் ஈடுபடுவது சந்தோஷம் அளிக்கக் கூடியதுதான். அந்த வட்டத்துக்குள் நாம் உற்சாகமாக இருப்போம். அங்கே இருக்கிற வரை அந்த உற்சாகம் நீடிக்கும்.<க்ஷழ்>ஆனால், நான் எனது கித்தாரை வைத்துவிட்டு, என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் போது, எனக்குள் புதிய ஆற்றல் புகுவதை உணர்வேன். இசையின் புதிய பரிணாமங்கள் புரிபடும். நான் தினந்தோறும் புதியவனாகி இசையை வாழ்க்கையாக கரைந்துவிடுவேன். குடும்பத்தின் உதவியில்லாமல் நான் எதையுமே சாதித்திருக்க முடியாது என்பது மட்டும் உறுதி.
3. எல்லாவற்றிலும் மிதமாக இருப்பது நல்லது
இரவு முழுவதும் மது அருந்தியிருப்பேன். ஆனால், அதிகாலையில் எழுந்து எனது மகளுடன் எனக்குப் பிடித்த இசையை கேட்க விரும்புவேன். நிறைய குடிக்க ஆசை இருக்கும். நிறைய குடிக்கவும் முடியும். ஆனால், அடிக்கடி குடிப்பதை தவிர்த்துவிடுவேன். மது அருந்துவதில் மட்டும் இல்லை எனது மகிழ்ச்சி. என்றாவது ஒருநாள் எனது அனைத்து நண்பர்களுடனும் நீண்ட நேரம் மது அருந்துவேன். அந்த இரவு நீண்டு கொண்டே போகும். நண்பர்களில் யாரேனும் ஒருவர் கீழே விழுந்து இடுப்பெலும்பை முறித்துக் கொள்வார்.
4. எப்போதும் நீங்கள், நீங்களாகவே இருங்கள்
இசை என்பது மேஜை நாற்காலி செய்யும் தச்சுக் கூட்டத்திலிருந்து தம்பி வந்த பொருள் என்றே நான் கருதுவேன். என்னைப் பொருந்தமட்டில் இப்போதும் அப்படித்தான் உணர்கிறேன். உழைத்துக் களைத்து நாள் முடிவில் வெளியேறும்போது, உங்களுக்குப் பாடத் தோன்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு முன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்றா பார்ப்பீர்கள்? அதை ஒரு பொருட்டாக நினைப்பீர்களா? உங்கள் சந்தோஷத்திற்காக பாடத்தானே செய்வீர்கள். நான் முதன்முதலில் பாடியபோது எனது தெருவில் ஆறுபேர் மட்டுமே கேட்டார்கள். அப்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேனோ அதே அளவு மகிழ்ச்சியுடன் இப்போதும் நான் இருக்கிறேன்.

5. ஒரே சமயத்தில் இரண்டில் புகழ் பெற்றவராக முடியுமா? >முடிந்தால் புகழ் பெருங்கள். இல்லையென்றாலும் சரிதான். தொடக்கத்தில் எல்லோருமே விரக்தி ஏற்படத்தான் செய்யும். நான் நிர்வாணா இசைக்குழுவில் சேர்ந்தபோது, இப்படித்தான் உணர்ந்தேன். நண்பர்கள் இருவருடன் கனடாவில் பனிப்புயலுக்கு மத்தியில் ஓட்டை வேனில் பயணிக்க நேர்ந்தது. அந்த வேன் முழுவதும் ஆயில் ஒழுகியது. நாங்கள் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறவர்களைப் போல மாறியிருந்தோம்.<க்ஷழ்>எங்களுடைய முதல் ஆல்பம் சாதனை படைத்திருந்தது. ஆனால், அதை எனது முத்திரையாக பயன்படுத்த விரும்பவில்லை. தொடக்க முயற்சியாளர்கள் தோல்வியையும் விரக்தியையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அது உங்கள் தோளிலேயே அமர்ந்திருக்க அனுமதிக்கக் கூடாது. ஒருநாள் புகழின் உச்சிக்கு நீங்கள் செல்லக்கூடும். நான் அப்படித்தான் புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அதன்பிறகு திரும்பப் பார்க்கவே இல்லை. முன்னோக்கியே எனது பயணம் இருந்தது.
6. எழுந்திருங்கள்
பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாதீர்கள். அப்படி ஒன்று இருந்ததாகவே நினைக்காதீர்கள். அது பீதியை ஏற்படுத்தும். பீதியால் தாக்கப்பட்டவர்களைப் போல நீங்கள் ஆகிவிடுவீர்கள். சந்தோஷமான மனிதராக வாழுங்கள். இசை தெரிந்தால் பாடுங்கள். எழுதத் தெரிந்தால் எழுதுங்கள். உழைக்கத் தெரிந்தால் உழையுங்கள். உற்சாகம் தானாகவே வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக