திங்கள், 21 ஜூன், 2010

குழந்தையுடன் பேசுங்கள்

உங்கள் குழந்தையுடன் நீங்கள் பேசலாம். பிறந்த பின்பு அல்ல 5 மாத கருவாக இருக்கும் போதிலிருந்தே. இது சிலருக்கு வியப்பாகவும், சிரிப்பாகவும் கூட இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

ஆம் உங்களது 5 மாத கருவிற்கு காதுகள் நன்றாக கேட்க ஆரம்பித்துவிடும். எனவே அப்போதிருந்தே உங்கள் குழந்தையுடன் நீங்கள் பேச ஆரம்பிக்கலாம்.

அதற்காகத்தான் அந்த காலத்தில் 5, 7ஆம் மாதத்தில் பூ முடிப்பு, வளைகாப்பு என்று நடத்தினார்கள். உங்கள் வயிற்றுக்கு அருகே இருக்கும் கைகளில் அதிகமான வளையல்களைப் போட்டுக் கொண்டு அசையும் போது அதன் சத்தம் கேட்டு உங்களது குழந்தையும் அசையும்.

உங்கள் குழந்தை கருவில் இருந்தே உங்களது குரலை நன்கு அறிந்திருக்கும். எனவே அதனுடன் நீங்கள் வாய்விட்டு பேசுவதை அது உணரும்.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கர்ப்பிணிகளின் அருகில் அமர்ந்து கொண்டு தாலாட்டுக்களையும், ஆன்மீகப் பாடல்களையும் பாடுவார்கள். இதெல்லாம் தாய்க்கு அல்ல, தாய்க்குள் இருக்கும் குழந்தைக்குத்தான்.

கர்ப்பிணியாக இருக்கும்போது அதிகமாக பாடல்களை கேளுங்கள் என்று சொல்வதும் இதன் காரணமாகத்தான். குழந்தைகள் முரடாக இல்லாமல் இருக்கவும் இந்த இசை உதவுகிறது.

நீங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு இப்போதே தாலாட்டு பாடினீர்களானால், குழந்தை பிறந்த பிறகு அந்த பாடலைக் கேட்டதும் சீக்கிரம் தூங்கிவிடும்.


webdunia photo WD
மேலும், குழந்தையிடம் நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கும் முக்கியமான உறவுகளையும் அறிமுகம் செய்து வைக்கலாம். இதையெல்லாம் கேலியாக நினைக்காமல் உணர்வுப்பூர்வமாக சிந்தியுங்கள்.

குழந்தையின் தந்தையும் அடிக்கடி வயிற்றின் அருகே சென்று பேசுவது, உறவினை மேம்படுத்தும்.

இதையெல்லாம் எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்களா, குழந்தை பிறக்கவில்லையா, வளரவில்லையா, அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்கவில்லையா என்று விதண்டாவாதமாக கேள்வி கேட்பவர்களுக்கு இது முற்றிலும் பொருந்தாது.

பொதுவாக கருவின் அனைத்து விஷயங்களையும் ரசிக்கும் தாய் தந்தைக்குத்தான் இந்த கட்டுரை பொருந்தும்.

நீங்கள் எங்கு சென்றாலும், அதன் விவரத்தை உங்கள் குழந்தையிடம் மிக மகிழ்ச்சியுடன் சொல்லிப் பாருங்கள். அந்த கருவும் உங்களது மகிழ்ச்சியை அனுபவிக்கும். மகிழ்ச்சியாக எப்போது சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை வேண்டுமானால் நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை கருவிற்கு வெளிப்படுத்துங்கள்.

‌நீ‌ங்க‌ள் பே‌சிய, கூ‌றிய, வெ‌ளி‌ப்படு‌த்‌திய ‌விஷய‌ங்க‌ள் குழ‌ந்தையை செ‌ன்று சே‌ர்‌ந்‌திரு‌க்குமா எ‌ன்ற ச‌ந்தேக‌த்‌தி‌ற்கான ‌தீ‌ர்வை உ‌ங்க‌ள் குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம் உண‌ர்‌‌வீ‌ர்க‌ள்.

அதில்லாமல் குழந்தையின் அசைவுதான் பிரசவத்திற்கு மிக முக்கியமான விஷயமாகும். குழந்தை தலை திரும்புவதற்கும் இந்த அசைவுக்கும் அதிக தொடர்பு உள்ளது. பிரசவத்தின் இறுதி வரை தலைதிரும்பாத குழந்தைகளும் ஏராளம் உண்டு. கவனத்தில் கொள்ளுங்கள்.

எனவே உ‌ங்க‌ள் கரு‌விட‌ம் பேசு‌ங்‌க‌ள், பாடு‌ங்க‌ள், கதை சொ‌ல்லு‌ங்க‌ள், கே‌ள்‌வி கேளு‌ங்க‌ள். ‌நீ‌ங்க‌ள் பேசு‌‌ம்போது உ‌ங்க‌ள் குழ‌ந்தை ஆ‌ர்வமாக‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ப்பதை ‌‌நீ‌ங்களே உண‌ர்‌வீ‌ர்க‌ள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக