திங்கள், 30 மே, 2011
குழந்தைகள் சாப்பிடுவது இல்லை
திங்கள், 23 மே, 2011
முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்!
* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்
மருந்துகளில் மாமருந்து தேன்..
மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.
வயிற்றின் நண்பன் தேன்
வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.
ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.
இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.
மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்
நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை
நோய் தொற்றை எதிர்க்கும் ஆண்டிபயாடிக் திறனை மேம்படுத்துவதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு சில நுண் உயிரி தொற்றுகள் பாதிப்பு காரணமாக நோய்கள் நீண்ட காலம் இருப்பதுடன் அடிக்கடி நோய்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
மருந்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை நுண் உயிரிகள் வீரியம் இழக்கச் செய்து விடுவதால் நோய் தொற்றுப் பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது.
நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் பாதிப்பை தவிர்க்க தாவர சர்க்கரை வகைகளான குளுக்கோஸ், ப்ரக்டோஸ் உதவுகிறது. ஒரு கரண்டி சர்க்கரை மருந்தின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து நுண் உயிரிக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்று அபாயமும் தவிர்க்கப்படுகிறது. பாஸ்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள் சர்க்கரையை பயன்படுத்தி நுண் உயிரி சோதனையை செய்த போது இந்த உண்மை தெரியவந்தது.
சிறுநீரக பாதையில் இ.கோலி என்ற பக்டீரியா நோய் தொற்றை ஏற்படுத்தும். இந்த பாதிப்பை அடிக்கடி ஏற்படுத்தும் நுண் உயிரியை 99.9 சதவீதம் 2 மணி நேரத்தில் சர்க்கரை உதவி மூலம் விஞ்ஞானிகள் அகற்றினர்.
சர்க்கரை இல்லாமல் உள்ள மருந்து உரிய பலன் அளிப்பதில்லை என்கிற இந்த ஆய்வு அறிக்கை நேச்சர் இதழில் வெளியாகி உள்ளது
செர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்
"பிணிகள் பிடிக்காத செடி" என்றே இதைச் சொல்லாம். மேலும் இதன் அருகில் வந்து ஆடு, மாடுகள் மேய்வதில்லை. போர்ட்டோ ரிகே, செர்ரிபார்படோஸ் செர்ரி என்பன செர்ரிப்பழத்தின் வேறு பெயர்கள். தமிழில் "அற்புத நெல்லி" என்று வழங்கப்படுகிறது. இது புதர்வகைச் செடியாகும்.
நான்கு அடி முதல் ஐந்து அடி உயரம் வரை அடர்ந்து தழைத்து வளரும். இவைகள் கரும்பச்சை நிறத்திலும், பழங்கள் சிறிய ஆப்பிள் வடிவத்திலும் இருக்கும். பழங்கள் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இந்தச் செடியை நட்டு ஏழு மாதத்திற்குள் பயன் தரக்கூடியது. பழம் தரக்கூடியது.
ஒரு செடியிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு கூடைகள் பழம் கிடைக்கும். இந்தச் செடியை விவசாயிகள் மட்டுமே வளர்க்க முடியும் என்றில்லை நாமும் நம் வீடுகளில் வளர்த்துச் சிறந்த பலனைக் காணலாம். செர்ரி செடி தாவர இயலில் "மல்பீஜஸியாஸ்" குடும்பத்தைச் சேர்ந்தது.
செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும்.
உங்கள் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். செர்ரிப் பழத்தைக் கொண்டு ரசம், ஜாம், ஜெல்லி, ஜூஸ் ஆகியவை தயாரிக்க முடியும்.
தண்ணீருடன் தேவையான அளவு பழங்களைப் போட்டுப் பிழிய வேண்டும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவேண்டும்.
இதுதான் செர்ரிப் பழ ஜூஸ். செர்ரிப் பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிவிட வேண்டும். சம அளவு சர்க்கரை சேர்த்துத் தேவையான விகிதத்தில் எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிட வேண்டும்.
தகுந்த பதத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். இதுவே அருமையான செர்ரி ஜாம் ஆகும். ரொட்டித் துண்டுகளை இந்த ஜாமில் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு இந்த ஜாமைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். செர்ரி காய்களை நறுக்கி உப்பில் கலந்து அவைகளை வெயிலில் காய வைக்கவேண்டும்.
மூன்று நாட்கள் இவ்வாறு செய்தபின் அவைகளுடன் இஞ்சிச் சாறு, மஞ்சள் தூள் ஆகியவைகளைப் போட்டுக் குலுக்க வேண்டும்.
அதன்பின் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டு தாளியுங்கள். அதன்பின் அந்தக் கலவையைப் பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்
சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுக்க உதவி செய்கின்றன
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்தோடு இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.
இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது
வெள்ளி, 20 மே, 2011
ரோஜாவின் மருத்துவ குணங்கள்
தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள்.
ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது. இத்தகைய ரோஜா மலர்கள் மருத்துவ பயன் உடையவை. ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும்.
ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை.
பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன. ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும்.
மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.
களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும்.
பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும்.
இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம்.
இதனால் ரத்த விருத்தி உண்டாகும். ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்
புதன், 11 மே, 2011
உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்
சீன மருத்தும்
நோய்களைத் தடுப்பது, நோய்க் கூறுகளைக் கண்டறிவது, நோய்களுக்கு சிகிச்சை தருவது ஆகியன சீன மூலிகை மருத்துவத்தின் நோக்கமாகுகம். இதில் இயற்கை மருந்துகளும் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் உள்ளன. அதாவது மூலிகைகள் மிருகங்கள், கணிமப் பொருட்கள்., சில ரசாயனப் பொருட்கள், உயிரி பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளாகும். சீன தயாரிக்கப்படும் மருந்துகளாகும். சீன மருந்தின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. எனினும் “சீன மருத்துவம்”என்ற சொல் சீனாவில் மேலை மருத்துவம் அறிமுகமான பின்னரே உருவாக்கப்பட்டது. மேலை மருத்துவத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக சீன மருத்தும் என்று பெயரிடப்பட்டது.வெள்ளி, 6 மே, 2011
சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம் !
உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் பல ஆய்வு நிறுவனங்கள் பல்வேறு சோதனைகள் நிகழ்த்திக் கதிரவன் மூலம் நீரைக் குடிநீராக மாற்றும் எளிய வழியைக் கண்டறிந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி இருக்கின்றது.
கதிரவனின் கதிர்களில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத A-புற ஊதாக் கதிர்கள் நீரில் கலந்திருக்கும் பாக்டீரியாவின் செல்லமைப்பைச் சிதைக்கின்ற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட புற ஊதாக் கதிர்கள் நீரிலிருக்கும் பிராணவாயுவுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் பெராக்ஸைடாக மாறிக் கிருமிகளை அழிக்கின்றன.
மேலும் அகச்சிவப்புக் கதிர்கள் நீரைச் சூடாக்குவதால் மேலே குறிப்பிட்ட இருவினைகளும் மிக வேகமாக நிகழ்கின்றன.
இந்த முறையைப் பயன்படுத்துவது எப்படி? இதற்கென்று தனியான தொழிற்சாலைகள் நிறுவ வேண்டுமா?
மேலே குறிப்பிட்டவாறு,
1. சுத்தமான வண்ணமில்லா ஒளிபுகும் பிளாஸ்டிக் போத்தல்களை (2 லிட்டருக்கும் குறைவான அளவு) எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: குடி நீருக்கென்றே தயாரிக்கப்பட் பிளாஸ்டிக் போத்தல்கள்.
2. நமக்குக் கிடைக்கும் அசுத்தமான நீரை அந்தப் போத்தல்களில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும். அதிலிருக்கும் ஆக்ஸிஜன் வெளியேறும் வகையில் 20 விநாடிகள் குலுக்க வேண்டும்.
3. மிகவும் கலங்கிய நிலையில் நீர் இருந்தால் அதை வடிகட்டிக் கொள்வது நல்லது.
4. பின்னர் நீர் நிரப்பிய போத்தல்களைச் சாய்வான நிலையில் சூரியனைக் காணும் வண்ணம் பளபளப்பான அலுமினியக் கூரைகளில் வைத்து விட வேண்டும்.
5. சூரியனின் பார்வையில் ஆறு மணி நேரம் இவ்வாறு வைக்க வேண்டும்.
இதோ, சூரியனால் பதம் பார்க்கப்பட்ட சுத்தமான குடிநீர் தயார்! செலவே இல்லாத இந்த முறையை உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது என்பது ஒரு முக்கியமான தகவல் ஆகும்.
மேகமூட்டமான காலங்களில் ஆறுமணி நேரத்திற்கு மேலாகவோ அல்லது இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தோ வைத்திருத்தல் அவசியம் ஆகும். மேலும் அந்தப் போத்தல்களில் இருந்தே நீரைக் குடிப்பது சாலச் சிறந்தது.
இந்தோனேஷியாவில் இந்த முறையைப் பயன்படுத்தும் பொதுமக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே காணுங்கள்.
சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம் !
உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் பல ஆய்வு நிறுவனங்கள் பல்வேறு சோதனைகள் நிகழ்த்திக் கதிரவன் மூலம் நீரைக் குடிநீராக மாற்றும் எளிய வழியைக் கண்டறிந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி இருக்கின்றது.
கதிரவனின் கதிர்களில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத A-புற ஊதாக் கதிர்கள் நீரில் கலந்திருக்கும் பாக்டீரியாவின் செல்லமைப்பைச் சிதைக்கின்ற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட புற ஊதாக் கதிர்கள் நீரிலிருக்கும் பிராணவாயுவுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் பெராக்ஸைடாக மாறிக் கிருமிகளை அழிக்கின்றன.
மேலும் அகச்சிவப்புக் கதிர்கள் நீரைச் சூடாக்குவதால் மேலே குறிப்பிட்ட இருவினைகளும் மிக வேகமாக நிகழ்கின்றன.
இந்த முறையைப் பயன்படுத்துவது எப்படி? இதற்கென்று தனியான தொழிற்சாலைகள் நிறுவ வேண்டுமா?
மேலே குறிப்பிட்டவாறு,
1. சுத்தமான வண்ணமில்லா ஒளிபுகும் பிளாஸ்டிக் போத்தல்களை (2 லிட்டருக்கும் குறைவான அளவு) எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: குடி நீருக்கென்றே தயாரிக்கப்பட் பிளாஸ்டிக் போத்தல்கள்.
2. நமக்குக் கிடைக்கும் அசுத்தமான நீரை அந்தப் போத்தல்களில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும். அதிலிருக்கும் ஆக்ஸிஜன் வெளியேறும் வகையில் 20 விநாடிகள் குலுக்க வேண்டும்.
3. மிகவும் கலங்கிய நிலையில் நீர் இருந்தால் அதை வடிகட்டிக் கொள்வது நல்லது.
4. பின்னர் நீர் நிரப்பிய போத்தல்களைச் சாய்வான நிலையில் சூரியனைக் காணும் வண்ணம் பளபளப்பான அலுமினியக் கூரைகளில் வைத்து விட வேண்டும்.
5. சூரியனின் பார்வையில் ஆறு மணி நேரம் இவ்வாறு வைக்க வேண்டும்.
இதோ, சூரியனால் பதம் பார்க்கப்பட்ட சுத்தமான குடிநீர் தயார்! செலவே இல்லாத இந்த முறையை உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது என்பது ஒரு முக்கியமான தகவல் ஆகும்.
மேகமூட்டமான காலங்களில் ஆறுமணி நேரத்திற்கு மேலாகவோ அல்லது இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தோ வைத்திருத்தல் அவசியம் ஆகும். மேலும் அந்தப் போத்தல்களில் இருந்தே நீரைக் குடிப்பது சாலச் சிறந்தது.
இந்தோனேஷியாவில் இந்த முறையைப் பயன்படுத்தும் பொதுமக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே காணுங்கள்.
சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது ?
'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.
சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.
பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது
புதன், 26 ஜனவரி, 2011
மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான் பழம்
இந்த பழமானது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இதன் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு. இதன் மருத்துவ குணங்கள் சில: * இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன்படுத்தி வந்தனர். * சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. * சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். * வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். * மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். * பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து மங்குஸ்தான் ரீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். * சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும். மங்குஸ்தான் பழத்தில் நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம் |
திங்கள், 17 ஜனவரி, 2011
முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க :
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
.jpg)
